tamilnadu

img

4 கிரிக்கெட் வீரர்களின் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

பூனம் யாதவ், முகமது ஷமி, ரவிந்திர ஜடாஜா, பும்ரா ஆகியோரின் பெயர்களை அர்ஜூனா விருதுக்கு பிசிசிஐ பரிந்துரைத்தது.

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் இந்திய வீரர்–வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான முகமது ஷமி, ரவிந்திர ஜடாஜா, பும்ரா மற்றும் பெண் கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ் ஆகியோரின பெயர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளது.


;